டிராக்டர் கவிழ்ந்து கல்லூரி மாணவர் சாவு
சிவகிரியில் டிராக்டர் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகிரியில் டிராக்டர் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகிரி அருகேயுள்ள குமாரபுரம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சந்தனப்பாண்டியன் மகன் மீனாட்சிசுந்தரம் (18). ராஜபாளையம் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முருகன் என்பவரது டிராக்டரில் சிலருடன் சேர்ந்து பேயன் ஆற்றுப் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, டிராக்டர் கவிழ்ந்ததில் மீனாட்சிசுந்தரம் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, சிவகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.