எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வழக்குரைஞர் அணி கூட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருநெல்வேலி மண்டல வழக்குரைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருநெல்வேலி மண்டல வழக்குரைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் நவ்புல் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சர்தார், வழக்குரைஞர்கள் சதாம், ரத்தினக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் முஹம்மதுஷபி பங்கேற்றுப் பேசினார்.
கூட்டத்தில், "மேலப்பாளையம் உள்பட மாநகரப் பகுதியில் வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், காவல்துறை மற்றும் உளவுத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து குற்றங்களை தடுக்க வேண்டும்; திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் சாலை சீரமைப்பு, பொதுமக்களுக்கு கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாவட்டச் செயலர் ஆரிப் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.