நெல்லையில் சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; பெட்ரோல்-டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்; அனைத்து தொழிலாளர்களுக்கும் மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கிட வேண்டும், சாலை பாதுகாப்பு மசோதாவை வாபஸ் பெற வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்;100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத் தலைவர் எம்.சுடலைராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் எஸ்.பெருமாள், எஸ்.வண்ணமுடத்து, மரிய ஜானிரோஸ், டி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் ராஜகுரு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி.தியாகராஜன், லிக்காய் குழந்தைவேல், பேரின்பராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.