FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நெல்லை பள்ளி, கல்லூரியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

திருநெல்வேலி இந்து தொடக்கப் பள்ளி, ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திருநெல்வேலி இந்து தொடக்கப் பள்ளி, ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்து தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா, வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம், கல்வி கற்பிக்க காணொலி உபகரணங்கள் வழங்கும் விழாவுக்கு பள்ளிக்குழுத் தலைவர் சு. சண்முகவேலன் தலைமை வகித்தார். திருநெல்வேலி ரோட்டரி சங்கத் தலைவர் ஜி. பரமசின் முன்னிலை வகித்தார். விழாவில், அன்னை மீனாட்சி பொது அறக்கட்டளைத் தலைவர் உ. சிதம்பரபாண்டியன், வ.உ.சி. உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார்.டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன் கல்வி கற்பதற்கான காணொலி சாதனங்கள் வழங்கினார். 
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். சுதன் வாழ்த்திப் பேசினார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  பள்ளிச் செயலர் செல்லப்பா வரவேற்றார்.தலைமையாசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார்.
சாரதா கல்லூரி: பாளையங்கோட்டை ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரி நிர்வாகி ஸ்ரீமத் பக்தானந்த மகராஜ் தலைமை வகித்தார். செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா முன்னிலை வகித்தார். முதல்வர் மு. மலர்விழி அறிமுகஉரையாற்றினார். கணித பேராசிரியர் மீ. முருகலிங்கம், உதவிப் பேராசிரியை பார்வதிதேவி, கல்லூரி மாணவிகள் ரோஷினி கேத்தரின், எம். மகாலட்சுமி,  ரோகிணி, க. வைஷ்ணவி உள்ளிட்டோர் பேசினர்.
மாணவர் பேரவைத் தலைவி வி. ருக்மணி வரவேற்றார். மாணவி ஸ்ரீசாரதா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments