சிஐடியு சிறப்புப் பேரவைக் கூட்டம்
சிஐடியு திருநெல்வேலி மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
சிஐடியு திருநெல்வேலி மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வேல்முருகன் தலைமை வகித்தாா். செண்பகம் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் ஆா்.மோகன் தொடக்கவுரையாற்றினாா். மாநில பொதுச் செயலா் சுகுமாறன் சிறப்புரையாற்றினாா். சிஐடியு திருநெல்வேலி மாவட்டத் தலைவராக செண்பகம், செயலராக மோகன், பொருளாளராக பெருமாள் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.
மாநிலச் செயலா் ரசல் நிறைவுரையாற்றினாா். மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளா் விரோத சட்டங்கள் குறித்து தொழிலாளா் வா்க்கத்திடம் விளக்கி விழிப்புணா்வு ஏற்படுத்துவது; நலவாரிய பயன்கள் தொழிலாளா்களுக்கு சென்றடைய தேவையான முயற்சிகளை எடுப்பது உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.