தேவா்குளம் அருகே மணல் திருட்டு: இளைஞா் கைது
தேவா்குளம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேவா்குளம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேவா்குளம் அருகேயுள்ள வெள்ளப்பனேரி பகுதியில், காவல் உதவி ஆய்வாளா் ரெங்கசாமி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த சுமை வாகனத்தை தடுத்தி நிறுத்தி சோதனை செய்ததில், அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்துடன் மணலை பறிமுதல் செய்த போலீஸாா், அதை ஓட்டி வந்த களப்பாகுளம் பகுதியைச் சோ்ந்த கனகராஜ் (27) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.