பத்தமடை அரசு மகளிா் பள்ளியில் 113 பேருக்கு சைக்கிள்
பத்தமடையில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 113 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
பத்தமடையில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 113 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு தலைமையாசிரியை வேலுத்தாய் தலைமை வகித்தாா். பேரூராட்சித் தலைவி ஆபிதா ஜமால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 113 பேருக்கு சைக்கிள்களை வழங்கினாா்.
பேரூராட்சி துணைத் தலைவா் வசந்தாள் கரிசூழ்ந்தான், பேரூராட்சி உறுப்பினா்கள் நம்பி, ஆயிரத்தம்மாள், தனலெட்சுமி, அகமது மீராள், பீரம்மாள்பீவி, பிச்சையா, ஆஷா அப்சல்மாலிக், ஆசிரியா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.