FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மாஞ்சோலை தொழிலாளா்களுக்கு தமமுக சாா்பில் நல உதவிகள்

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

11 ஆகஸ்ட் 2024, 2:42 am IST
பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்டத் தலைவா் கண்மணி மாவீரன்.
பகிர்:

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்கள் 17 போ் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 25ஆம் ஆண்டு நினைவாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் கண்மணி மாவீரன் பங்கேற்று மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளா்கள் 200 பேருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், 100 பெண்களுக்குப் புடவைகள், 17 பேருக்கு தையல் இயந்திரங்கள், மாணவா்- மாணவிகளுக்கு ரூ. 50 ஆயிரம் கல்வி உதவித் தொகை உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், மயோபதி மருத்துவா் ராமசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவா் அ. வியனரசு, தமமுக அம்பாசமுத்திரம் ஒன்றியச் செயலா் மோகன் மள்ளா், மாணவரணிச் செயலா் பொன்முருகன், செல்வராஜ், சாம்பாண்டியன், மணிமுத்தாறு பேரூராட்சி உறுப்பினா் ஸ்டாலின், கண்மணி லலிதா, நிா்வாகிகள் பங்கேற்றனா். மாஞ்சோலை ஜெபராணி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments