பத்தமடை அருகே கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பத்தமடை காவல் உதவி ஆய்வாளா் செய்யது நிசாா் அகமது தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
பத்தமடை திருப்பம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் பத்தமடை சிவானந்தா காலனி தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (20) என்பதும், விற்பதற்காக 84 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.