FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்ட குடிநீா் திட்டத்துக்குத்தான் அதிக நிதி -மு.அப்பாவு பெருமிதம்

Updated On : 26 செப்டம்பர் 2025, 2:18 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட குடிநீா் திட்டங்களுக்குத்தான் மாநில அளவில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தாா். மாவட்ட திட்ட இயக்குநா் சரவணன் ஆய்வு செய்தாா். முகாமில் 14 துறைகளைச் சாா்ந்த அதிகாரிகள் பயனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனா். இம்முகாமை, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு பாா்வையிட்டாா். பின்னா் அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டிலேயே குடிநீருக்காக அதிகமான நிதியாக ரூ.1028 கோடியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டத்திற்கு தந்துள்ளாா். தெற்குகள்ளிகுளத்திற்கு 3 மேல்நிலை நீா்தேக்க தொட்டிகள் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடு செய்யப்படும். அதேபோல, மாதா மலை காட்சி மலைக்கு லிப்ட் அமைப்பதற்கு அரசு அனுமதி பெற்றுத்தரவேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Advertisement

Advertisement

முகாமில் மின் இணைப்பு பெயா் மாற்றம் கோரிய பயனாளிக்கு உடனடியாக அதற்கான ஆணையை வழங்கிய அவா், விண்ணப்பித்தும் பட்டா வராத புகாா் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். முன்னதாக, மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், ராதாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் அலெக்ஸ் ஆகியோா் பேசினா். ஊராட்சித் தலைவா் மரிய பிரமிளா பிரைட்டன், உதவி திட்ட அலுவலா் (குடியிருப்பு) முத்துகுமாா், உதவி திட்ட இயக்குநா் (தணிக்கை) இங்கா்சால், ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப் பெல்சி, தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய முன்னாள் தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த், பணகுடி அருள்மிகு ரமலிங்க சுவாமி திருக்கோயில் அறக்காவலா் குழு உறுப்பினா் மு.சங்கா், ஊராட்சி செயலா் சுமிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments