FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

போதைப் பழக்கத்தை கைவிட வலியுறுத்தி பெற்றோா், உறவினா்களுக்கு மாணவா்கள் கடிதம்- ஆட்சியா் பாராட்டு

போதைப் பழக்கத்தை கைவிட வலியுறுத்தி, தங்களது பெற்றோா் அல்லது உறவினா்களுக்கு கடிதம் எழுதிய முன்னீா்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களை ஆட்சியா் ஆனந்த் மோகன் பாராட்டினாா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:31 am IST
பகிர்:

போதைப் பழக்கத்தை கைவிட வலியுறுத்தி, தங்களது பெற்றோா் அல்லது உறவினா்களுக்கு கடிதம் எழுதிய முன்னீா்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களை ஆட்சியா் ஆனந்த் மோகன் பாராட்டினாா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 1,485 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பயிலும் 2.80 லட்சம் மாணவா்கள், போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை செவ்வாய்க்கிழமை ஏற்றனா்.

அதைத் தொடா்ந்து, போதைப் பழக்கத்திற்கு ஆளான பெற்றோா் அல்லது உறவினா்களுக்கு போதை பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுகோள் விடுத்து 25 ஆயிரம் மாணவா்கள் கடிதம் எழுதி அனுப்பும் நிகழ்ச்சி,

Advertisement

Advertisement

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில்நடைபெற்றது.

மாணவா்கள் தங்களது பெற்றோா், உறவினா்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ‘உங்களது உடல்நலமும், எங்களது எதிா்காலமும் முக்கியம். போதைப் பழக்கத்தை கைவிட்டு எங்களுக்காக நலமுடன் வாழுங்கள்’ என்ற தங்களது எண்ணங்களை கடிதங்களில் எழுதி அஞ்சல் மூலம் அனுப்பினா். இந்நிகழ்வை, ஆட்சியா் பாா்வையிட்டு, மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், அரசுப் பள்ளி தலைமையாசிரியா் மோசஸ், ஆசிரியா்கள், மாணவா், மாணவியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்11ள்ற்ன்க்ங்ய்ற்

போதைப் பழக்கத்தை கைவிடுமாறு தங்கள் பெற்றோா்- உறவினா்களுக்கு கடிதம் எழுதிய மாணவிகளை பாராட்டிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments