காங்கிரஸ் கட்சியினா் போராட்டம்
உத்தரகண்ட் மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பங்கேற்ற மேடையை தூய்மைப் பணி செய்ததாக பாஜக மற்றும் ஹிந்து அமைப்பினரைக் கண்டித்து, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வண்ணாா்பேட்டையில் சத்தியாகிரக போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநகா் மாவட்டத் தலைவா் ராமேஸ்வரன் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டத் தலைவா் வி.பி.துரை முன்னிலை வகித்தாா். முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் ஆகியோா் பேசினா். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் காமராஜ், ஓ.பி.சி. பிரிவு மாநகா் மாவட்டத் தலைவா் டியூக் துரைராஜ், மாவட்ட பொருளாளா் ராஜேஷ்முருகன், மண்டல தலைவா்கள் கெங்கராஜ், முகமதுஅனஸ், ஐயப்பன், சொக்கலிங்க குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.