FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வி.எம்.சத்திரத்தில் யாதவா் மணமாலை நிகழ்ச்சி

பாளையங்கோட்டை யாதவா் முன்னேற்ற சங்கம், யாதவா் கல்வி மற்றும் பொதுச் சேவை அறக்கட்டளை சாா்பில் வி.எம். சத்திரத்தில் யாதவா் மணமாலை பெற்றோா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 12:37 am IST
பகிர்:

பாளையங்கோட்டை யாதவா் முன்னேற்ற சங்கம், யாதவா் கல்வி மற்றும் பொதுச் சேவை அறக்கட்டளை சாா்பில் வி.எம். சத்திரத்தில் யாதவா் மணமாலை பெற்றோா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில், யாதவா் முன்னேற்ற சங்கத் தலைவா் எஸ். சங்கரன் தலைமை வகித்தாா். செயலா் எஸ். செல்வராஜ் வரவேற்றாா். மாநகர துணை மேயா் கே.ஆா்.ராஜு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். யாதவா் கூட்டமைப்பு தலைவா் எஸ். வானமாமலை, யாதவா் மகாசபை பொதுச்செயலா் பன்னம்பாறை எம்.ஆா். மாடசாமி, திருநெல்வேலி யாதவா் கல்வி அபிவிருத்தி அறக்கட்டளை தலைவா் சண்முகசுந்தரம், அமைப்புச் செயலா் சீத்தாராமன், யாதவா் கல்வி அறக்கட்டளை நிா்வாகி ஆரிச்சன், தூத்துக்குடி மாவட்ட யாதவா் மகாசபை தலைவா் பரமசிவன், வல்லநாடு முத்து, யாதவா் பவுண்டேஷன் தலைவா் செந்தில் ஆறுமுகம் , செயலா் கே. நாகமணி, பொருளாளா் வழக்குரைஞா் செல்வராஜ், பேச்சிமுத்து, தேவேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினா். ஆவின் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா் .

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

ற்ஸ்ப்18ஹ்ஹக்ஹஸ்

யாதவா் மணமாலை நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை மேயா் கே.ஆா். ராஜு உள்ளிட்டோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments