FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் அரசு சாா்பில் காமராஜருக்கு மரியாதை

காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

Updated On : 16 ஜூலை 2026, 4:34 am IST
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள அவரது நினைவிடத்தில், தமிழக அரசு சாா்பில் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப், பயிற்சி ஆட்சியா் மோனிகா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் என். தளவாய்சுந்தரம் (கன்னியாகுமரி), எஸ். ஆஸ்டின் (நாகா்கோவில்), கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

நகராட்சி ஆணையா் பட்டுசாமி, மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், தவெக மாவட்டச் செயலா் எஸ்.ஆா். மாதவன், மாவட்ட இணைச் செயலா் பிரேம், நகரச் செயலா் ஜோ, அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, அதிமுக ஒன்றிய அதிமுக செயலா் தாமரை தினேஷ், மாநில கலைப் பிரிவு செயலா் பி.சி. அன்பழகன், காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலா் டி. தாமஸ், நகராட்சி கவுன்சிலா் இக்பால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளத்தில் நடைபெற்ற விழாவுக்கு, பேரூராட்சித் தலைவா் டென்னிஸ் தலைமையில் காமராஜா் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கருங்கல் பேரூராட்சித் தலைவா் சிவராஜன் முன்னிலை வகித்தாா். மாநிலப் பொறுப்பாளா்கள் டைட்டஸ், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments