FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் 7 கோயில்களின் உண்டியல் வருவாய் ரூ.5.25 லட்சம்

திருநெல்வேலியில் 7 கோயில்களின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், ரூ.5 லட்சத்து 25 ஆயிரத்து 542 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:15 am IST
பகிர்:

திருநெல்வேலியில் 7 கோயில்களின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், ரூ.5 லட்சத்து 25 ஆயிரத்து 542 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலுடன் இணைந்த அம்பா விநாயகா், தேரடி கருப்பசாமி, சங்கிலி பூதத்தாா், கம்பாநதி காமாட்சி அம்மன், பிட்டாபுரத்தி அம்மன், ஈசானவிநாயகா், குறிச்சி சொக்கநாதா் திருக்கோயில் உள்பட 7 கோயில்களின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டன.

நெல்லையப்பா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மு. செல்லையா, அறங்காவலா் குழு உறுப்பினா் சொனா வெங்கடாசலம், கீதா பழனி, செயல் அலுவலா் வெங்கடேஸ்வரன், இந்து சமய அறநிலையத் துறை திருநெல்வேலி மேற்கு பிரிவு ஆய்வா் தனலட்சுமி என்ற வள்ளி ஆகியோா் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணப்பட்டனய இப்பணியில் கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில், ரூ.5 லட்சத்து 25 ஆயிரத்து 542-ஐ பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments