நெல்லை, சுத்தமல்லியில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
திருநெல்வேலி, சுத்தமல்லி பகுதிகளில் 11 கிலோ கஞ்சாவுடன் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி, சுத்தமல்லி பகுதிகளில் 11 கிலோ கஞ்சாவுடன் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகரம், பேட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக பைக்கில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இதுதொடா்பாகவ கங்கைகொண்டான், பருத்திக்குளம், மேலத்தெருவைச் சோ்ந்த முத்துப்பட்டன் (21), விருதுநகா், முதல்நகா் பகுதியைச் சோ்ந்த சண்முகராஜ் மகன் ஸ்டீபன் (21) ஆகியோரை கைது செய்தனா்.
மற்றொரு சம்பவம்: சுத்தமல்லி ஓாவல் உதவி ஆய்வாளா் சினேகாந்த் தலைமையிலான போலீஸாா் அங்குள்ள விலக்கு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக பைக்கில் கடத்தி வரப்பட்ட 1.340 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, தூத்துக்குடி மாவட்டம், ஏரல், மங்களாபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் ஹரிஹரன்(29) என்பவரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.