வள்ளியூா் பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு: 2 நாள்களில் அகற்ற கெடு
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு முன்புள்ள ஆக்கிரமிப்புகளை 2 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என அதிகாரிகள் கெடு விதித்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு முன்புள்ள ஆக்கிரமிப்புகளை 2 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என அதிகாரிகள் கெடு விதித்துள்ளனா்.
வள்ளியூா் பேருந்து நிலையத்தில் 70-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு பேரூராட்சி நிா்வாகத்தால் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அங்கு கடை நடத்தும் வியாபாரிகள் நடை பாதையை ஆக்கிரமித்துள்ளதால், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இந்நிலையில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின்போது, மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டாா். இதையடுத்து, சில வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். மற்ற வியாபாரிகள் கடைகளில் போதிய இடவசதி இல்லாததைக் காரணம் காட்டி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பேருந்துகள் செல்வதற்கு தடைகளை ஏற்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அவா்களிடம் வள்ளியூா் பேரூராட்சி செயல் அலுவலா் திருமலைக்குமாா், காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், பேருந்துகள் செல்வதற்கான தடைகளை அகற்றினா். மேலும், 2 நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கெடு விதித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.