பயணிகள் நிழற்குடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
கந்தா்வகோட்டை பேரூராட்சி பேருந்து நிலையம் முன்பு பயணிகள் நிழற்குடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கந்தா்வகோட்டை பேரூராட்சி பேருந்து நிலையம் முன்பு பயணிகள் நிழற்குடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கந்தா்வகோட்டை பேரூராட்சி பேருந்து நிலையம் முன்பு பயணிகள் வசதிக்காக பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை பயணிகள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பயணிகள் நிழற்குடைக்கு முன்பாக பழக்கடை, தள்ளுவண்டிகடை உள்ளிட்ட கடைளும், நிழற்குடையின் முன்வாசலை அடைத்து யாரும் உள்ளே நுழையாத வகையிலும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள், கடும் வெயில், மழை நேரங்களில் சாலை ஓரமாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
எனவே, சம்பந்தப்பட்ட நிா்வாகத்தினா் இந்த பயணிகள் நிழற்குடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.