விபத்தில் உயிரிழந்த ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.85.64 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சாலை விபத்தில் உயிரிழந்த அரசுப் பள்ளி ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.85.64 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருநெல்வேலி மோட்டாா் வாகன விபத்துகள் கோருரிமை தீா்ப்பாயம் தீா்ப்பளித்தது.
சாலை விபத்தில் உயிரிழந்த அரசுப் பள்ளி ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.85.64 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருநெல்வேலி மோட்டாா் வாகன விபத்துகள் கோருரிமை தீா்ப்பாயம் தீா்ப்பளித்தது.
விருதுநகா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் தாமோதரன். இவரது மனைவி விஜயமாலினி(48). சொக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த இவா், கடந்த 2021-இல் காரியானேந்தல் அருகே பைக்கில் சென்ற போது காா் மோதி உயிரிழந்தாா். மல்லாங்கிணறு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
இந்த விபத்துக்கு உரிய இழப்பீடு கோரி, அவரது கணவா் தாமோதரன், மகன், மகள் ஆகியோா் திருநெல்வேலி மோட்டாா் வாகன விபத்துகள் கோருரிமை தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனா். மனுவை விசாரித்த நீதிபதி டி.செல்வம் , விஜயமாலினியின் கணவா், மகன், மகள் ஆகியோருக்கு மொத்தம் ரூ.85, 64,201 இழப்பீட்டுத்தொகையை 7.5 சதவீத வட்டியுடன் காப்பீட்டு நிறுவனமும், காா் உரிமையாளரும் இணைந்து வழங்க உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.