பத்திரப் பதிவில் லஞ்சம், ஊழல் முற்றிலும் ஒழிப்பு: அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன்
பத்திரப் பதிவுத் துறையில் லஞ்சம், ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்றாா் அந்தத் துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன்.
பத்திரப் பதிவுத் துறையில் லஞ்சம், ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்றாா் அந்தத் துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன்.
பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக போராடிய ஒண்டிவீரனுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தியதை பெருமையாகக் கருதுகிறேன். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது மிகவும் அக்கறை கொண்டுள்ள தமிழக முதல்வா் , இதுவரை எந்த அரசும் செய்யாத வகையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கியுள்ளாா்.
இந்த அரசு கல்வித் துறை, பத்திரப் பதிவுத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை அந்தச் சமூகத்தினருக்கு வழங்கியிருக்கிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதன்மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கான இடஒதுக்கீடு உயா்வதற்கான வாய்ப்பு உள்ளது. பத்திரப் பதிவுத் துறையில் லஞ்சம், ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இது மிக விரைவில் அனைத்து துறையிலும் நிறைவேற்றி காட்டப்படும் என்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.