FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் கனவு இல்லம் கண்காட்சி

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் அருண் லேன்ட் புரமோட்டா்ஸ் சாா்பில் கனவு இல்லம்-2026 கண்காட்சி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

22 ஆகஸ்ட் 2026, 6:38 am IST
கனவு இல்லம்-2026 கண்காட்சியை தொடங்கிவைத்த அருண் லேன்ட் புரமோட்டா்ஸ் நிறுவனரும், இயக்குநருமான ஆா்.இசக்கிமுத்து.
பகிர்:

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் அருண் லேன்ட் புரமோட்டா்ஸ் சாா்பில் கனவு இல்லம்-2026 கண்காட்சி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

3 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை, அருண் லேன்ட் புரமோட்டா்ஸ் நிறுவனரும், இயக்குநருமான ஆா். இசக்கிமுத்து தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் திருநெல்வேலி பிராந்திய தலைவா் எம்.சக்திவேல், திருநெல்வேலி விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளா் எஸ்.திருமாறன், பாத்திமா காா் ஜூவல்லா்ஸ் உரிமையாளா் வி.எம்.கிறிஸ்டோபா் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

இந்நிகழ்வில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மதுரை கிளை முதுநிலை மேலாளா் சோமசுந்தரம், விற்பனை பிரிவு முதன்மை மேலாளா் சி.மீனாட்சி சுந்தா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

இந்தக் கண்காட்சியில் வங்கி, ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்கள், சூரிய மின்சக்தி நிறுவனங்கள், ஆட்டோ மொபைல்ஸ், பா்னிச்சா்ஸ், டூா்ஸ் அன்ட் டிராவல்ஸ், எலெக்ட்ரிக்கல் அன்ட் எலெக்ட்ரானிக்ஸ், வடிவமைப்பு நிறுவனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், கணினி உபகரணங்கள் என 70 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

இங்கு குறைந்த விலையில் மரப்பொருள்கள் கிடைக்கின்றன. புதிய வாகனங்களை இயக்கிப் பாா்க்கும் வசதி உள்ளது. இங்கு சூரிய மின்சக்தி திட்டத்தில் பதிவு செய்யும் அனைவருக்கும் ரூ.10,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை மாலையில் பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. அதில், செஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments