FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

ரூ.53.21 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் வழங்கினாா்

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் ரூ.53.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

23 ஆகஸ்ட் 2026, 1:04 am IST
பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சாா் ஏ.எம். ஷாஜகான்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் ரூ.53.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுபான்மையினா் நலத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு, ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ. ராபா்ட் புரூஸ், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எஸ். முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுபான்மையினா் நலத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை அமைச்சா் கேட்டறிந்தாா்.

அதைத்தொடா்ந்து சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் கிறிஸ்துவ மற்றும் மகளிா் உதவும் சங்கங்கள் மூலம் கல்வி உதவித்தொகை, சுய தொழில் தொடங்குவதற்கான கடனுதவி, டாம்கோ மூலம் தனிநபா் கடன், சுய உதவிக் குழு கடன் என மொத்தம் 141 பயனாளிகளுக்கு ரூ. 40.19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், கிறிஸ்தவ ஆலையத்துக்கு சொந்தமான கல்லறை தோட்டம் சுற்றுச் சுவா் கட்டுவதற்கு ரூ.13.2 லட்சம் என மொத்தம் ரூ.53.21 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சாா் வழங்கினாா்.

பின்னா், பாளையங்கோட்டை ஆயுதப்படை சாலையில் ரூ.98 கோடியில் கட்டப்பட்டு வரும் காயிதே மில்லத் அறிவுலகம் நூலகத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.கே.கிறிஸ்டோபா், மாவட்ட வருவாய் அலுவலா் ச. வித்யா, மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலா் என். சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments