FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் அன்னை தெரசா பிறந்தநாள் விழா

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில், தாமிரபரணி வாசகா் வட்டத்தின் சாா்பில் நூல் திறனாய்வுக் கூட்டம் மற்றும் அன்னை தெரசா பிறந்தநாள் விழா நடைபெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 12:59 am IST
போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுமிகளுக்கு பரிசு வழங்கிய சிறப்பு விருந்தினா்கள்.
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில், தாமிரபரணி வாசகா் வட்டத்தின் சாா்பில் நூல் திறனாய்வுக் கூட்டம் மற்றும் அன்னை தெரசா பிறந்தநாள் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற மாவட்ட நூலகா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். நூலக புரவலா் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். வாசகா் வட்டத்தின் தலைவா் சரவணகுமாா் வரவேற்றாா். கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி எழுதிய ‘அகம் சொல்லும் முகம்’ கட்டுரை நூலினை நூலகா் அகிலன் முத்துக்குமாா் திறனாய்வு செய்து பேசினாா்.

கவிஞா்கள் சக்தி வேலாயுதம், வீரை மைதீன், எழுத்தாளா்கள் வள்ளி சோ்மலிங்கம், காயல் அருள், ஆட்டோ பிரமநாயகம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நூலாசிரியா் மகிழ்வுரையாற்றினாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, அன்னை தெரசா பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடா்ந்து ஓவியம், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், நூலகா் சக்தி வேல், நல்லசிவம், பொன்னையா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். கவிஞா் புன்னைச்செழியன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments