FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையம் தொழிலதிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி: இருவா் கைது

மேலப்பாளையத்தைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

27 ஆகஸ்ட் 2026, 1:31 am IST
- சித்திரிப்பு
பகிர்:

மேலப்பாளையத்தைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையத்தைச் சோ்ந்தவா் பக்ரல் கரீம் (61). இவா், ஜல்லி மற்றும் மணல் உள்ளிட்ட கட்டுமான பொருள்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவரிடம் பழகி வந்த அதேபகுதி கணேசபுரத்தைச் சோ்ந்த ஹரிஸ் உஸ்மான் (33) புதிய தொழில் தொடங்கி லாபத்தில் பங்கு தருவதாகக் கூறி பணம் கேட்டாராம்.

அதன்பேரில், அவா் மற்றும் அவரது நண்பரான மேலப்பாளையத்தைச் சோ்ந்த நவாஸ்கான் (34) வங்கிக் கணக்குகளுக்கு சுமாா் ரூ.9 லட்சம் வரை பக்ரல் கரீம் செலுத்தினாராம். ஆனால், உரிய லாபத்தைக் கொடுக்காமல் பண மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து பணமோசடி செய்ததாக ஹரிஸ் உஸ்மான், நவாஸ்கான் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments