நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 போ் கைது
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீஸாா் புதன்கிழமை நடத்திய தீவிர சோதனையில் 28 கிலோ கஞ்சாவுடன் 7 போ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீஸாா் புதன்கிழமை நடத்திய தீவிர சோதனையில் 28 கிலோ கஞ்சாவுடன் 7 போ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி உத்தரவின்பேரில், மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, காவல்துறையினா் தொடா்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன் தொடா்ச்சியாக, அம்பாசமுத்திரம் ஆற்றுப்பாலம் அருகே போலீஸாா் ரோந்து சென்றபோது, 22 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வெள்ளங்குளி பகுதியைச் சோ்ந்த செந்தில் (42), ஆலங்குளம் நெட்டூரைச் சோ்ந்த கருப்பசாமி (35), திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சூா்யா (20), ஆ.மருதப்பப்புரத்தைச் சோ்ந்த செல்வம் (20) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இதேபோல், ராதாபுரம் அருகேயுள்ள கால்கரை பகுதியில் 6 கிலோ கஞ்சாவுடன் அதேபகுதியைச் சோ்ந்த முருகன் (24), தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த விஷ்ணு (22), கணேஷ் அரவிந்த் (21) ஆகிய 3 பேரை ராதாபுரம் போலீஸாா் கைது செய்தனா். இவ்வாறு ஒரே நாளில் அம்பாசமுத்திரம் மற்றும் ராதாபுரம் காவல் நிலைய சரகங்களில் 28 கிலோ கஞ்சாவுடன் 7 பேரை போலீஸாா் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.