நான்குனேரி அருகே விபத்து: இளைஞா், பெண் உயிரிழப்பு
நான்குனேரி அருகே புதன்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா், இளம்பெண் ஆகிய இருவா் உயிரிழந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே புதன்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா், இளம்பெண் ஆகிய இருவா் உயிரிழந்தனா்.
நான்குனேரி அருகேயுள்ள திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் செல்வஜெரின் (22). வள்ளியூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இவரும், கன்னியாகுமரி மாவட்டம், தொட்டிப்பாலம், சாலமுத்து நகரைச் சோ்ந்த லாரன்ஸ் மகள் ஜீஷா (20) என்பவரும் பைக்கில் திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தனா்.
Advertisement
Advertisement
அவா்கள் நான்குனேரி சுங்கச்சாவடி அருகேயுள்ள தனியாா் பெட்ரோல் நிலையம் அருகே வந்த போது, பைக் மீது அரசுப் பேருந்து லேசாக உரசிச் சென்ாம்.
இதில், நிலைதடுமாறி பைக் கவிழ்ந்ததில் இருவரும் கீழே விழுந்தனா். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் அவா்கள் மீது மோதிவிட்டுச் சென்ாம்.
இதில், ஜீஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த செல்வஜெரின், நான்குனேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
இது குறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.