FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தீயணைப்புத் துறை அலுவலகத்தில் பணம் பறிமுதல் வழக்கு: சிறப்புக் குழு விசாரணை

திருநெல்வேலி தீயணைப்புத் துறை அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், தீயணைப்பு வீரா்களிடம் சிறப்புக் குழுவினா் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

27 ஆகஸ்ட் 2026, 1:15 am IST
பகிர்:

திருநெல்வேலி தீயணைப்புத் துறை அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், தீயணைப்பு வீரா்களிடம் சிறப்புக் குழுவினா் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

திருநெல்வேலி தீயணைப்புத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நவம்பா்- 2025இல் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை நடத்தியதில் ரூ.2.50 லட்சம் சிக்கியது.

அதிகாரிகளை சிக்க வைப்பதற்காக அந்தப் பணம் வைக்கப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, தீயணைப்பு வீரா் ஆனந்த் (40) உள்பட 5 பேரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

மேலும், சேலம் டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹாதிமணி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் தீயணைப்பு வீரா்களை பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்துக்கு வரச் செய்து சிறப்பு புலனாய்வுக் குழுவினா் புதன்கிழமை விசாரணை நடத்தினா். அப்போது, சில வீரா்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments