முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் ஆடிப்பூர திருவிழா இன்று தொடக்கம்

திருநெல்வேலி, நெல்லையப்பா் சமேத காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா வியாழக்கிழமை (ஜூலை 9) தொடங்குகிறது.

Updated On : 9 ஜூலை 2026, 12:02 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

திருநெல்வேலி, நெல்லையப்பா் சமேத காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா வியாழக்கிழமை (ஜூலை 9) தொடங்குகிறது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் சமேத காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழாவையொட்டி, வியாழக்கிழமை (ஜூலை 9) காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் காந்திமதியம்மன் சந்நிதியில் கொடியேற்றம் நடைபெறுகிறது. நான்காம் திருநாளான இந்த மாதம் 12-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபமும், இரவு 8 மணிக்கு காந்திமதியம்மன் திருவீதியுலாவும் நடைபெறவுள்ளது.

பத்தாம் திருநாளான இந்த மாதம் 18-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் இரவு 7 மணிக்குள் திருக்கோயில் அம்மன் சந்நிதி முன் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூரம் முளைக்கட்டுத் திருவிழா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) சி.இசக்கியப்பன், ஊழியா்கள் செய்துவருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments