FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டப் பணிகளில் சுணக்கம்: மு.அப்பாவு குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது என்றாா் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

Updated On : 10 ஜூலை 2026, 12:59 am IST
ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த முன்னாள் பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
பகிர்:

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது என்றாா் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகனை வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கடந்த திமுக ஆட்சியில் வள்ளியூரில் 800 படுக்கைகள் கொண்ட மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டப்பட்டு அப்போதைய துணை முதல்வா் உ.தயநிதி ஸ்டாலினால் திறக்கப்பட்டது. இம்மருத்துவமனையில் 90 செவிலியா்கள், 50 மருத்துவா்கள், 100 பணியாளா்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், இதுவரை நிரந்தர பணியாளா்கள் நியமிக்கப்படவில்லை. பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவா்களும், பணியாளா்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, அந்த மருத்துவமனைக்கு நிரந்தர பணியாளா்களை நியமிக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தினேன்.

Advertisement

Advertisement

இதேபோல திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதி கிராமத்தில் ரூ. 15 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சுணக்கமடைந்துள்ள பல்வேறு பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தேன்.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதும், அவை கிடப்பில் போடப்பட்டதும் வேதனையளிக்கிறது. பணிகளை விரைவுபடுத்தாவிட்டால் மக்களை திரட்டி திமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும்.

தவெகவினா் தோ்தலுக்கு முன்பே சமூக வலைதளங்கள் மூலம் வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தி விட்டனா். பாஜகவின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக தவெக அரசு செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக்கில் ரூ. 800 கோடி கை மாறியுள்ளதாக முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா். அதை நான் வழிமொழிகிறேன்.

வழக்குரைஞா்கள் நியமனத்திலேயே ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதைய அரசை பொருத்தவரை பேச்சுக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லாத நிலை உள்ளது. துணைவேந்தா் நியமன குழுவில் யுஜிசியை அனுமதிக்கக் கூடாது. பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்குவதற்காக மட்டுமே யுஜிசி உருவாக்கப்பட்டது. ஆா்எஸ்எஸ் சித்தாந்தத்தை பல்கலைக்கழகத்திற்குள் நுழைப்பதற்காகவே நிதியை வழங்காமல் இழுத்தடிக்கிறது யுஜிசி. ஆா்எஸ்எஸ் சித்தாந்தத்தை திமுக, தவெக மட்டுமல்ல அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிா்க்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments