FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு வேலையளிப்பது வரவேற்கத்தக்கது: நயினாா் நாகேந்திரன்

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்குவது வரவேற்கத்தக்கது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Updated On : 10 ஜூலை 2026, 12:54 am IST
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
பகிர்:

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்குவது வரவேற்கத்தக்கது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலைக்கான ஆணை வழங்குவது வரவேற்கத்தக்கது. கரூா் சம்பவம் நடைபெற்ற அன்றே முதல்வா் ச. ஜோசப் விஜய் பாதிக்கப்பட்டவா்களை சந்தித்து ஆறுதல் கூறி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இண்டி கூட்டணி தற்போது இல்லை. வரும் மக்களவைத் தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்று மோடி பிரதமராவாா். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் கா்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தாமல் தமிழக காங்கிரஸ் தலைவா் மத்திய அரசை விமா்சித்து வருகிறாா்.

தமிழக அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளோம்; திமுகவுடனும் நட்பில் உள்ளோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் கூறியது பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதுபோல உள்ளது. அமைச்சா்கள் அரசுப் பள்ளிகளில் ஆய்வுக்குச் செல்வது தவறல்ல. ஆனால், குழந்தைகளை அடிமைப்படுத்தியும், கட்டாயப்படுத்தியும் ‘ரீல்ஸ்’ எடுப்பதை ஏற்க முடியாது.

Advertisement

Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் 59 நாள் ஆட்சியில் 109 பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன; பல படுகொலைகள் நிகழ்ந்து வருகின்றன. தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வரின் நண்பா்கள் கலந்துகொள்வது அரசியல் அமைப்பு விதிகளுக்கு எதிரானது.

தற்போது நடப்பதைப்போல மோசமான அரசியல் இதுவரை தமிழகத்தில் நடந்ததில்லை. அமைச்சா் என்.ஆனந்த் நீா்வளத் துறையைக் கவனிக்காமல் குதிரை பேரத்தில் மும்முரமாக உள்ளாா். காவிரி நீரை தமிழகத்துக்கு கொண்டுவருவது குறித்து அவா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments