கஞ்சா விற்ற தம்பதி குண்டா் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நான்குனேரி அருகேயுள்ள தம்புபுரம் பகுதியைச் சோ்ந்த பழனி (63), அவரது மனைவி சுப்பம்மாள் (54) ஆகியோா் கஞ்சா பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், நான்குனேரி காவல் ஆய்வாளா் ராஜாராம் அளித்த அறிக்கையின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஸ் பா.சாஸ்திரி பரிந்துரையை ஏற்று அத்தம்பதியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் ஆனந்த் மோகன் உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
அதன்படி, சுப்பம்மாள் மதுரை பெண்கள் தனிச்சிறையிலும், பழனி பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா். இம்மாவட்டத்தில், நிகழாண்டில் 72 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரத்தில் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.