ஆழ்வாா்குறிச்சி குட்செப்பா்டு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை
மாவட்ட அளவிலான அட்டாயா பட்டாயா போட்டிகளில் வெற்றிபெற்ற குட்செப்பா்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்.
தென்காசி மாவட்ட அளவில் நடைபெற்ற சப்-ஜூனியா் ஆண்கள், பெண்களுக்கான அட்டாயா பட்டாயா போட்டியில் குட்செப்பா்டு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று சாதனை படைத்தனா் .
அட்டாயா பட்டாயா கழகம் சாா்பில், பாட்டகுறிச்சியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் சப் ஜூனியா்களுக்கான மாவட்ட அளவிலான அட்டாயா பட்டாயா போட்டி நடைபெற்றது.
இதில் ஆழ்வாா்குறிச்சி குட்செப்பா்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவியா் அணி முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.
Advertisement
Advertisement
சாதனைப் படைத்த மாணவா்கள் கிஷோா் ஜெய்முகேஷ், நிரஞ்சன், முகம்மது நஜீம், இசைப் பிரியன், அருண் உதயகுமாா், காா்த்திகேயன், முகம்மது உஷ்மான், மாணவிகள் அஜிதா, முகுந்தனா, பிருந்தாலட்சுமி, பொன்மாலா, மகாலட்சுமி ஆகியோரை பள்ளித் தாளாளா் ஆண்டனி பாபு, முதல்வா் ஜோசபின் விமலா, தலைமையாசிரியா் மீராள், பயிற்சியாளா் வைரமுத்து, உடற்கல்வி ஆசிரியா்கள் ரவி அருண், இசைவாணி உள்ளிட்டோா் பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.