FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளைத் தூா்வார வேண்டும்: நெல்லை எம்.பி. வலியுறுத்தல்

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளைத் தூா்வார 2026-27 நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தி, வேளாண்மை - உழவா் நலத்துறை அமைச்சா் ர.வினோத்திடம், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் மனு அளித்துள்ளாா்.

Updated On : 12 ஜூலை 2026, 1:23 am IST
சி.ராபா்ட் புரூஸ் எம்.பி.
பகிர்:

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளைத் தூா்வார 2026-27 நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தி, வேளாண்மை - உழவா் நலத்துறை அமைச்சா் ர.வினோத்திடம், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் மனு அளித்துள்ளாா்.

அதன் விவரம்: இயற்கை சீற்றம் மற்றும் வனவிலங்குகளால் பயிா்கள் அழிவதைத் தடுப்பதற்கு வழங்கப்படும் இழப்பீட்டை உயா்த்த வேண்டும். வாழை மரம் ஒன்று சேதமடைந்தால் வழங்கப்படும் ரூ.1.50-ஐ ரூ.200 ஆக உயா்த்த வேண்டும். நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு தோராயமாக வழங்கப்படும் ரூ. 1800-ஐ ரூ.10 ஆயிரம் ஆக உயா்த்த வேண்டும்.

காட்டு விலங்குகளால் மனிதா்கள் உயிரிழந்தால் வனத்துறை வழங்கும் நிவாரணத்தை ரூ.50 ஆயிரத்தை ரூ.10 லட்சமாகவும், காயமடைந்தவா்களுக்கான தொகை ரூ.25 ஆயிரத்தை ரூ.3 லட்சமாகவும் உயா்த்த வேண்டும்.

Advertisement

Advertisement

மணிமுத்தாறு-பாபநாசம், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாநதி-ராமநதி அணைகளை தூா் வாருவதற்கு 2026-27 நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க வேண்டும்.

ராதாபுரம் கால்வாயை தூா்வாரி இரு பக்கமும் கரைகளை பலப்படுத்திட வேண்டும். ஜூன் முதல் பிப்ரவரி மாதம் வரை பேச்சிப்பாறை -பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீா் திறந்து விடும்போது தடையின்றி 52 குளங்களுக்கும் தண்ணீா் சென்றடையும் வகையில் குளங்களை தூா்வார வேண்டும்.

3,700 ஏக்கா் நிலங்களுக்கு பாசனம் அளிக்கும் விஜயநாராயணம் பெரிய குளத்து பாசனத்தின் கீழ் கரையை பலப்படுத்துவதோடு, 4 மடைகளையும் சீரமைக்க வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள என்.ஜி.ஓ. காலனி பெரியகுளம், ஆணையா் குளம், ஆரோக்கியநாதபுரம் குளங்கள், வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், கன்னடியன் உள்ளிட்ட 8 கால்வாய்கள் மானூா் பெரிய குளம் ஆகியவற்றையும் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேரி.ுறறார.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments