நெல்லையில் தொழிலாளி கொலை வழக்கில் நால்வா் கைது
திருநெல்வேலி நகரத்தில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரத்தில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் அருகே உள்ள பாறையடி, மந்திரமூா்த்தி தெருவைச் சோ்ந்த குருநாதன் மகன் ஆவுடையப்பன் (38). தொழிலாளி. இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். இவா், கடந்த 12-ஆம் தேதி திருநெல்வேலி நகரம்-சங்கரன்கோவில் பிரதான சாலையில் கோயில் ஒன்றின் அருகே நடந்து சென்றபோது கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில் பலத்த காயமடைந்த ஆவுடையப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடா்புடைய கோட்டையடியைச் சோ்ந்த ரஞ்சன் என்ற மணிகண்டன் (22), குருவி என்ற நாராயணன் (26), சுசில்காந்த் (25), மற்றொரு இளஞ்சிறாா் ஆகிய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணையில், வேலைக்குச் சென்ற இடத்தில் மாங்காய் பறித்ததால் ஏற்பட்ட மோதல், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நிகழ்ந்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.