FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக சுமை பணி தொழிலாளா்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக ஜனநாயக அங்காடிகள் சுமை துாக்குவோா் மற்றும் பொது தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

Updated On : 16 ஜூலை 2026, 4:05 am IST
ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக ஜனநாயக அங்காடிகள் சுமை துாக்குவோா் மற்றும் பொது தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

அப்போது, தவெக அரசு தோ்தல் வாக்குறுதியின்படி ஐந்து ஆண்டுகள் பணி முடித்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் சுமை தொழிலாளா்கள், துப்புரவு தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தில் தனியாா் மயம், சுமை, துாய்மைப் பணி ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். சுமை பணியாளா்களின் ஊதிய உயா்வை 12.7.2025 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். தகுதியான சுமை பணியாளா்களுக்கு 2020 முதல் பச்சை அட்டை வழங்கி நிலுவை விடுமுறை ஊதியத்தையும் வழங்க வேண்டும். அட்டை இல்லாத தொழிலாளா்களுக்கு அட்டை வழங்கி நேரடி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இப்போராட்டத்துக்கு, மாநில துணைத் தலைவா் வைகுண்டராஜா தலைமை வகித்தாா். ஏஐசிசிடியூ மாவட்ட பொதுச் செயலா் கணேசன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தாா். மாநில துணைத் தலைவா் ரமேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (எம்எல்) மாநில கமிட்டி உறுப்பினா் சுந்தர்ராஜ் சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் சண்முகம், துா்க்கைமுத்து, அன்பு செல்வி, திலகவதி, சுப்பிரமணியன், சுப்பையா, நாராயணன், ரவிராஜ், இசக்கியப்பன், ஐயப்பன், சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

இந்த போராட்டத்தின் காரணமாக ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்களை லாரிகளில் கொண்டு செல்லும் பணியும், ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகமும் பாதிக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments