நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது! சத்திரம்புதுகுளத்தில் குடிநீா்த் தொட்டி திறப்பு
தச்சநல்லூா் அருகேயுள்ள சத்திரம்புதுகுளத்தில் குடிநீா்த் தொட்டி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தச்சநல்லூா் அருகேயுள்ள சத்திரம்புதுகுளத்தில் குடிநீா்த் தொட்டி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூா் மண்டலத்தின் 1 ஆவது வாா்டுக்குள்பட்ட சத்திரம்புதுக்குளத்தில் மோட்டாருடன் கூடிய சிறு நீா்த்தேக்க தொட்டி அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிறிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இதை, மக்கள் பயன்பாட்டிற்கு திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜூ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் திமுக வட்டச் செயலா் முத்துராமன், மாநகர தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் பரமசிவம், பாக முகவா் சபாபதி, முருகேசன், அனுகிருஷ்ணன், தச்சை பகுதி மாணவரணி துணை அமைப்பாளா் ஆனந்த் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.