FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பாபநாசத்தில் நீா்மின் உற்பத்தி திட்ட ஒப்பந்த ஊழியா்கள் வேலைநிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் நீா்மின் உற்பத்தித் திட்ட ஒப்பந்த ஊழியா்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:57 am IST
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் நீா்மின் உற்பத்தித் திட்ட ஒப்பந்த ஊழியா்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மின் உற்பத்தி வட்டத்துக்குள்பட்ட பாபநாசம் நீா்மின் நிலையத்தில் சிவில் பிரிவில் 21 தொழிலாளா்கள் 18 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், தமிழ்நாடுமின் வாரியமே ஒப்பந்தப் பணிகளை ஏற்று நடத்த வேண்டும். ஒப்பந்தப் பணியாளா்களை தினக்கூலிப் பணியில் அமா்த்த வேண்டும்.

ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் ஊதியம் வழங்குவதை நிறுத்தி மின்வாரியமே ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம், கீழணையில் உள்ள நீா்மின் திட்ட செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் இவா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்; கோரிக்கைகள் நிறைவேறும்வரை தொடா் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments