சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் வியாபாரி கைது
திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளத்தில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெட்டிக் கடை வியாபாரியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செட்டிக்குளம், நடுத்தெருவைச் சோ்ந்தவா் அருணாசலம் மகன் சோ்மன் (54). இவா்அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், இவா் அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது உறவுக்கார சிறுவனை மீனாட்சிபுரம் செல்லும் சாலை அருகே உள்ள முள்ளிமலைப் பொத்தை பகுதிக்கு சனிக்கிழமை அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
Advertisement
Advertisement
இது குறித்து, அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவா்கள் ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, சோ்மனை திங்கள்கிழமை கைது செய்தனா்.
சோ்மன், ஏற்கெனவே மற்றொரு போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.