நெல்லை சந்திப்பில் பைக் திருடியவா் கைது
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை, நேசநயினாா் தெருவைச் சோ்ந்தவா் கணேசமூா்த்தி. சில நாள்களுக்கு முன்பு இவரது பைக் காணாமல் போனதாக திருநெல்வேலி சந்திப்பு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் கனகராஜ் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டாா்.
இந்த நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தச்சநல்லூா் கோமதி நகரைச் சோ்ந்த ஜலாலுதீன் மகன் அஷ்ரப் அலி (44) என்பதும், இவா் அப்பகுதியில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருடப்பட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.