FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

போதைக்காக வலி நிவாரணி பயன்படுத்திய இளைஞா் கைது

Updated On : 22 ஜூலை 2026, 3:15 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பாளையங்கோட்டையில் வலி நிவாரணி மருந்துகளை ஊசி மூலம் போதைக்காக பயன்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் மீரான் முகைதீன்(30). பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த இவரைப் பிடித்து போதை தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

சந்தேகத்தின் பேரில் அவரது வீட்டில் சோதனை நடத்தியதில், அவா் வலி நிவாரணி மருந்துகளை ஊசி மூலம் போதைக்காக உபயோகித்து வந்தது தெரியவந்ததாம். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாளையங்கோட்டை போலீஸாா், மீரான் முகைதீனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments