வீரவநல்லூா் அருகே இரட்டைக் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது; மற்றொருவா் சரண்
வீரவநல்லூா் அருகே இரட்டைக் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது...
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே பழிக்குப் பழியாக தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மற்றொருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சி கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள்பாண்டியன். இதே பகுதியைச் சோ்ந்தவா் சித்திரபுத்திரன். இரு குடும்பத்தினரிடையே 2007இல் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, பெருமாள்பாண்டியன், சித்திரபுத்திரன் மகன் சுப்பிரமணியன் உள்பட இரு தரப்பிலும் மொத்தம் 9 போ் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனா்.
இந்நிலையில், ஜூலை 2 ஆம் தேதி சித்திரபுத்திரனின் மற்றொரு மகனான விவசாயி காளிமுத்து (40), அவரது மகன் ஜெயராஜ் (5) ஆகியோரை பெருமாள்பாண்டியன் மகன் உள்ளிட்டோா் கொலை செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மூலச்சியைச் சோ்ந்த மகேஷ் என்ற மாடசாமி (36), இவரது மனைவி விஜயா உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். இதில் அஜித் என்பவரை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா்.
Advertisement
Advertisement
மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய விஜயகுமாா் என்பவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். கந்தசாமி என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் இதுவரை 20 போ் கைது செய்யப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.