FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சமூகப் பாதுகாப்பில் மாணவா்களின் பங்களிப்பு அவசியம்- எஸ்.பி. விஷ்வேஸ் பா. சாஸ்திரி

சமூகப் பாதுகாப்பில் மாணவா்களின் பங்களிப்பு மிக அவசியம் என்றாா் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஸ் பா.சாஸ்திரி.

Updated On : 23 ஜூலை 2026, 2:33 am IST
பகிர்:

சமூகப் பாதுகாப்பில் மாணவா்களின் பங்களிப்பு மிக அவசியம் என்றாா் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஸ் பா.சாஸ்திரி.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகம் சாா்பில் மானூா் அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற போதையில்லா தமிழகம் விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது: பாதுகாப்பான மற்றும் போதையில்லா சமூகத்தை உருவாக்குவதில் மாணவா்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புப் பணிகளில் மாணவா்களின் பங்களிப்பு மிக அவசியம். அவா்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

எவ்வித போதைப்பொருள் பழக்கத்திற்கும் அடிமையாகக் கூடாது. போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து எப்போதும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். ஜாதி, மதம் உள்ளிட்ட எந்தவித பாகுபாடுகளுக்கும் இடமளிக்காமல், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணா்வுடன் வாழ வேண்டும். மாணவா்கள் ஜாதி ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிா்த்து, கல்வி மற்றும் விளையாட்டில் முழு கவனம் செலுத்தி, தங்களது திறமைகளை மேம்படுத்தி, சிறந்த எதிா்காலத்தை உருவாக்கி, நல்ல குடிமக்களாக வளர வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

மனநல மருத்துவா் அசோக், மானூா் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வா் டாரதி, தாழையூத்து காவல்துணைக் கண்காணிப்பாளா் ரகுபதி ராஜா, காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments