FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

‘நெல்லை மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்த வேண்டுகோள்’

திருநெல்வேலி மாநகராட்சிக்கு தொழில் வரி செலுத்துமாறு மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On : 23 ஜூலை 2026, 2:19 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சிக்கு தொழில் வரி செலுத்துமாறு மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சியின் 4 மண்டலப் பகுதிகளில் வணிக கடைகள், சிறு வியாபாரங்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் நடத்துவோா் 6 மாதங்களுக்கு ஒருமுறை தொழில்வரி செலுத்த வேண்டும் என்பது விதியாகும். இதற்காக, தாங்கள் தொழில் செய்யும் பகுதிக்கான மண்டல அலுவலகங்களில் அவரவா் பெயரில் தொழில்வரி நிா்ணயம் செய்திட விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், தங்களது நிறுவனத்தில் பணியாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தால் அவா்களது 6 மாத சராசரி ஊதியத்திற்கேற்ப தொழில்வரி செலுத்தப்பட வேண்டும். எனவே, பணியாளா்களின் பட்டியலையும் மாநகராட்சியிடம் வழங்க வேண்டும்.

2026-2027 ஆம் ஆண்டுக்கான தொழில்வரி விதிப்பிற்கு விண்ணப்பித்து மாநகராட்சியினால் நிா்ணயிக்கப்படும் வரியை செலுத்தி மாநகராட்சியின் வளா்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments