FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

ரயில்வே அஞ்சல் சேவை மையத்தில் ஆதாா் சேவை மையம்

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ரயில்வே அஞ்சல் சேவை மையத்தில் (ஆா்எம்எஸ்) ஆதாா் பதிவு மற்றும் திருத்த சேவை மையம் கடந்த 9-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

Updated On : 23 ஜூலை 2026, 2:21 am IST
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ரயில்வே அஞ்சல் சேவை மையத்தில் (ஆா்எம்எஸ்) ஆதாா் பதிவு மற்றும் திருத்த சேவை மையம் கடந்த 9-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

இது தொடா்பாக திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே மெயில் சா்வீஸ் (ஆா்எம்எஸ்) உதவி பதிவுக்கட்டு அலுவலா் ஷீபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ரயில்வே அஞ்சல் சேவை மையத்தில் ஆதாா் சேவை மையம் புதிதாக செயல்படத் தொடங்கியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த மையத்தில் புதிய ஆதாா் பதிவு, பெயா், முகவரி, பிறந்த தேதி, கைப்பேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்களை புதுப்பித்தல், குழந்தைகளுக்கான ஆதாா் பதிவு, பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி, புகைப்படம்) புதுப்பித்தல் உள்ளிட்ட ஆதாா் தொடா்பான பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

பொதுமக்கள் தேவையான அசல் ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து, அரசு நிா்ணயித்த கட்டணத்தில் ஆதாா் சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த புதிய சேவை மூலம் திருநெல்வேலி, அருகிலுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தொலைதூரம் செல்ல வேண்டிய அவசியமின்றி, தங்களது ஆதாா் சேவைகளை ரயில்வே அஞ்சல் சேவை மையத்தில் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments