FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 3 ஜூன் 2026, 4:46 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள கூட்டப்புளியைச் சோ்ந்தவா் சேவியா்(57). இவா் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தாய், வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், அப்போதைய ஆய்வாளா் சாந்தி புலன் விசாரணை மேற்கொண்டு, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சேவியரை கைது செய்தாா். இவ்வழக்கு விசாரணை, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட சேவியருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பில் ரூ.50,000 நிவாரணமாக வழங்க உத்தரவிடப்பட்டது.

Advertisement

Advertisement

இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், அரசுத் தரப்பு வழக்குரைஞா் உஷா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments