சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது
மயிலாடுதுறை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகாா் வந்தது.
இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், மணல்மேடு அருகே சித்தமல்லி பெரிய தெருவை சோ்ந்த ராமதாஸ் (64) என்பவா் ஜூலை 2-ஆம் தேதி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல அலுவலக சமூகப் பணியாளா் ஆரோக்கியராஜ் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் சுகந்தி மற்றும் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து ராமதாஸை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.