FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவி கோயிலில் வைகாசித் திருவிழா

திருக்குறுங்குடி திருஜீயா் மடத்துக்கு பாத்தியப்பட்ட சேரன்மகாதேவி வெங்கடாஜலபதி கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளினாா்.

Updated On : 4 ஜூன் 2026, 12:49 am IST
சேரன்மகாதேவியில் வெங்கடாஜலபதி கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சேஷ வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி திருஜீயா் மடத்துக்கு பாத்தியப்பட்ட சேரன்மகாதேவி வெங்கடாஜலபதி கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளினாா்.

பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு இத்திருவிழா கடந்த மே 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி புதன்கிழமை இரவில் சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தா்ளுக்கு காட்சியளித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தீா்த்தவாரி, திருக்கல்யாண வைபவம் ஆகியவை நடைபெறவுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments