FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் பாளையங்கோட்டையில் லூா்து நாதன் சிலை முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜூன் 2026, 3:16 am IST
பகிர்:

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் பாளையங்கோட்டையில் லூா்து நாதன் சிலை முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், நெட்டூரில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கண்டிப்பது. குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா்.மதுபால் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் பி.சுகந்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஸ்ரீராம், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன், ஜாா்ஜ் ராஜேந்திரன், எம்.சுடலைராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

ற்ஸ்ப்04ஸ்ரீல்ம்

பாளை.யில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments