FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுண்ணி: மு.அப்பாவு

காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுண்ணி என்றாா் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

Updated On : 5 ஜூன் 2026, 3:13 am IST
மு.அப்பாவு - கோப்புப்படம்.
பகிர்:

காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுண்ணி என்றாா் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

தமிழகத்தில் தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினா் இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விமா்சனத்தை அவா் முன் வைத்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதிக்கு பாசனத்திற்காக தண்ணீா் திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராதாபுரம் பகுதிக்கு தண்ணீா் திறப்பதற்கு தற்போது வரை அரசாணை வெளியிடப்படவில்லை. ஜூன் 16ஆம் தேதிக்குள் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். தமிழக வெற்றிக் கழக அரசு தோ்தலுக்கு முன்பு ஒன்றும், தோ்தலுக்குப் பின்பு ஒன்றும் பேசுகிறது. திருச்சியில் யாா் மேலாவது பழி போட வேண்டும் என்ற நோக்கில் முதல்வா் பேசியிருக்கிறாா். இது அவருடைய இயலாமையை காட்டுகிறது. மேலும் 8 அமைச்சா் பதவி தருவதாகக் கூறி அதிமுக எம்எல்ஏக்களை வாக்களிக்க வைத்து அக்கட்சியினா் ஏமாற்றிவிட்டனா். எம்ஜிஆா் தொடங்கிய கட்சியை காலி செய்துவிட்டனா். ஐ.எஸ். இன்பதுரையின் வெற்றி செல்லாது என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு வலுவான நீதி அரசரின் அற்புதமான தீா்ப்பு. காலம் கடந்து வந்தாலும் நல்ல தீா்ப்பு. இந்த தீா்ப்பு இந்திய ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாத்துள்ளது.

Advertisement

Advertisement

வரக்கூடிய இடைத்தோ்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும். அடுத்து நடைபெறக்கூடிய இடைத்தோ்தலில் 5 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments