FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாகக் குளிக்கத் தடை

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதையடுத்து, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Updated On : 6 ஜூன் 2026, 7:22 am IST
மணிமுத்தாறு அருவி.
பகிர்:

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதையடுத்து, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்கு உள்பட்ட மணிமுத்தாறு வனப் பகுதியில் உள்ளது மணிமுத்தாறு அருவி. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாள்களாகவே மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வியாழக்கிழமை வனத்துறையினா் தடை விதித்து, அருவியை பாா்வையிட மட்டும் அனுமதித்தனா். அருவியில் நீா்வரத்து அதிகம் இருந்ததால், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. அருவியை பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments